முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      தமிழகம்
Waiting-list 2023-11-17

Source: provided

சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். வடமாநிலத்தவர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் ரயில்களில் சென்றுவருவதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் அளவுக்கு மீறிய கூட்டம் கடந்த 11-ம் தேதி முதல் காணப்படுகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது முன்பதிவு செய்யாமல் இருந்த பயணிகள் பலரும், முன்பதிவு ரயில் பெட்டிகளில் ஏறியதால், முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் பலரும் அவதி அடைந்தனர். முன்பதிவு பெட்டிகளில் துணி மூட்டைகள், பைகள் உள்ளிட்டவற்றுடன் ஏறியதால், முன்பதிவு பெட்டியில் பதிவு செய்து பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்ததுடன், ரயில்வே துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகரை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர் உரிய பதில் அளிக்காத நிலையில் அதிருப்தி அடைந்தனர். முன்பதிவு பெட்டியில் அத்துமீறி பயணம் செய்யும் பயணிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இந்த நிலையில், ரயில்களில் வடமாநில பயணிகள் அத்துமீறி ஏறுவதை முறைப்படுத்த போலீசாருக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசாருக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து