முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      உலகம்
UN 2025-10-15

Source: provided

நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்ப தற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான் என 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியான தூதர் ஹரீஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2026-28 ஆண்டுகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றிகள். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஈடுஇணையற்ற ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது. எங்களுடைய பதவி காலத்தில் இந்த நோக்கத்திற்காக செயலாற்ற நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் என பதிவிட்டு உள்ளார்.

இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதன்படி, 2026 முதல் 2028 வரையிலான 3 ஆண்டு காலகட்டத்திற்கு மீண்டும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலில் சேவையாற்றும். பருவகால மாற்றம், சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விசயங்களை கவுன்சிலில் சேர்த்துள்ளதுடன், மனித உரிமைகளுக்காக விரிவான அணுகுமுறைகளை ஐ.நா. கவுன்சிலில் இந்தியா சமர்ப்பித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து