முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் : இன்று இறுதி போட்டியில் மோதல்

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      விளையாட்டு
Woman Hokey 2024-11-11

Source: provided

மும்பை : 13-வது மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் தங்களது முதலாவது உலகக்கோப்பைக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிரணி வெற்றி பெற்றால் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் மிகப்பெரிய பரிசுத் தொகை வழங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2-வது அரையிறுதியில்...

மகளிருக்கான 13-வது உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்தது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியும், இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.

வெற்றி வாய்ப்பு... 

இதுவரையில் கோப்பையை வெல்லாத இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி இன்று நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இரண்டாவது அரையிறுதியில் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 339 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

பி.சி.சி.ஐ. ஆலோசனை.... 

இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மிகப்பெரிய பரிசுத் தொகையை வழங்க பிசிசிஐயின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு முன்னாள் பி.சி.சி.ஐ. செயலரும் தற்போதைய ஐ.சி.சி. தலைவருமான ஜெய் ஷா பரிந்துரையின் படி, ஆடவர் அணிக்கு வழங்கப்பட்டும் அதே ஊதியம் மகளிர் அணிக்கும் வழங்கப்படும் பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

ரூ. 125 கோடி வழங்க...

இதேபோன்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது போலவே சுமார் ரூ. 125 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், போட்டியின் முடிவுகளுக்கு முன்னதாக பரிசு குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிடுவது நல்லதல்ல என்று பி.சி.சி.ஐ.-யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தலா ரூ. 50 லட்சம்... 

2017 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி நூலிழையில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அப்போது இந்திய அணியின் உள்ள வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் துஷார் அரோத் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பான வெகுமதிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்திய அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் பரிசுத் தொகை 10 மடங்குக்கு மேல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பையுடன் போட்டோஷூட் 

இறுதிப்போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டனும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டனும் கோப்பையுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை ஐ.சி.சி. தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து