முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2026      தமிழகம்
bank

சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர். 

தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் அறிவித்துத் தொடர்ந்து தற்போது வரை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்க பல்வேறு சதிகள் நடப்பதாகக் கூறி நேற்று காலை 7 மணியளவில் திடீரென தமிழக முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிட்டார். 

அதில் மூன்று மாதக்கால உரிமைத்தொகை முன்கூட்டியும், கோடைக்கால தொகையாக ரூ. 2,000 என ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதால் மகளிர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இந்த மகளிர் உரிமைத்தொகை பணத்தை விரைந்து எடுக்காவிடில் திரும்பிவிடும் எனப் பொய் தகவல் அதிகளவில் கிராமப்புறங்களில் பரவியதால் கிராமப்புற வங்கிகளில் காலை 9 மணிக்கு முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம் அட்டை உள்ளிட்டவைகளை எடுத்து வரிசையாக வங்கிகளிலும், சில வங்கிகளில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும் பணத்தை எடுக்கக் காத்திருக்கின்றனர். மேலும், ஏ.டி.எம். மையங்களில் சிலர் தங்களது அட்டையைப் பயன்படுத்தத் தெரியாமல் பிறரை உதவிக்கு அழைக்கும் நிலையில், கடவுச்சொல் பாதுகாப்பின்மை கேள்விக்குறியாக உள்ளதை அறியாமல் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து