முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு

வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2026      தமிழகம்

போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.

காதலர் தினம் இன்று 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சிகப்பு, இளம் சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் பூக்கடைகளில் பூங்கொத்து விற்பனை களை கட்டியுள்ளதோடு கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து விற்பனை ஆகி வருகிறது.  கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து ஒரு பஞ்ச் (20 எண்ணிக்கை) விலை விபரம் வருமாறு:- சிகப்பு ரோஜா-ரூ.600, மஞ்சள் ரோஜா-ரூ.600, வெள்ளை ரோஜா-ரூ.400, ஆரஞ்சு ரோஜா-ரூ.500, பேபி பிங்க்-ரூ.400, ஜூமா லியா-ரூ.350.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து