எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகளோடு இணைந்து 64 சதவீத வாக்குகள் பெற்று 24 தொகுதிகளை வெல்லும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கும், தீங்கு ஏற்படாது. மோடி இன்னும் சில காலத்தில் புதுச்சேரிக்கு அறிவிப்புகள் மற்றும் திறப்பு விழாக்களை நடத்த உள்ளார். ஆகையால் மோடி மற்றும் ரங்கசாமிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். பயோ பார்மா துறையை விரிவாக்க புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பழைய ஜவுளி துறை ஆலைகளை புத்துயிர் அளித்து அவைகளை புத்துயிர் ஆக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விற்பனைக்கு விட்ட மோசமான செயலையும் நாராயணசாமி செய்துள்ளார். அவருடைய காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொழில் கூட தொடங்கவில்லை. இங்கு ஐந்து ஆண்டுகளில் ஸோஹோ நிறுவனம் மூலம், மென்பொருள் நிறுவனத்தை தொடங்கியுள்ளது தற்போதைய புதுச்சேரி அரசு. மேலும், புதுச்சேரியில் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வளர்ச்சித் திட்டத்திற்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிஏஜி அறிக்கையின் மூலம் தெரிந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் மோசமான செயல்களை நாராயணசாமி செய்துள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்தமோடி மலேசியா சென்றபோது திருவள்ளுவருக்கான இருக்கை ஒன்றை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். அங்கே மலேசியா வாழ் தமிழ் மாணவர்களுக்கு திருவள்ளுவர் பெயரில் ஊக்கத்தொகை அளிப்பதாக மோடி உறுதி அளித்துள்ளார்.
மலேஷியா நாட்டில் தமிழ் மொழிக்கு சிறுபான்மை மொழி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தை காந்தி குடும்பத்து ஏ.டி.எம். இயந்திரம் போல பயன்படுத்தி வந்தார். தில்லி கஜானாவை நிரப்பும் வேலையை மட்டுமே செய்து வந்தார். பல பதவிகளை அவர் ஏலம் விடும் செயலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஏலத்தில் விட்டார். போக்குவரத்து துறையை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என நாராயணசாமி லைசன்ஸ் கொடுத்து இருந்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் மூன்று துறைகளில் நம்முடைய கவனத்தை செலுத்தி ஆட்சி அமைக்க உள்ளோம்.
புதுச்சேரி மீனவர்களின் பொருள்களை உலக சந்தைகளில் கொண்டு சேர்க்க நமது இலக்கு இருக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், தரவுகள் மையம், செய்யறிவு உள்ளிட்ட துறைகளில் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பா.ஜ.க. ஏற்படுத்தி கொடுக்கும். கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கு மற்றும் வளர்ச்சிகளை சீர் செய்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும். இன்று நம்முடைய மோடியின் அரசைப் பார்த்து எந்தவொரு தீய சக்தியும் கண்ணெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.
புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் பா.ஜ.க. மீதும், ரங்கசாமி மற்றும் மோடி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 44 சதவீத வாக்குகள் அளித்து ஆதரவு அளித்தார்கள். இந்த முறை பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகளோடு இணைந்து புதுச்சேரியில் 64 சதவீத வாக்குகள் பெற்று 24 தொகுதிகளை வெல்லும் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


