முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      உலகம்
Jelensky 2024 08 19

முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப். 15) பதிவிட்டுள்ள ரூபியோ, உக்ரைனின் தேசப் பாதுகாப்பு குறித்தும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறைகளில் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்தும் உக்ரைன் அதிபருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ரத்தம் சிந்தப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்துவதில் அதிபர் டிரம்ப் முனைப்புடன் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா முன்னெடுத்துள்ள மத்தியஸ்த பேச்சுவார்த்தை ஜெனீவாவில் பிப். 17 - 18 நடைபெற உள்ளது. அதில், உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், உக்ரைன் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து