முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      இந்தியா
Kerala-2026-02-16

திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர். கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.

சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து