முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      தமிழகம்
TVK 2025-11-18

புதுச்சேரி, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். தொடர்ந்து நேற்று புதுச்சேரியிலும் தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெக பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதனை தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து