முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாசுதேவநல்லூர் ளு.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி கருத்தரங்கு

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி கல்விமாவட்டத்தில் உள்ள 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி கருத்தரங்கு வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 20 பள்ளிகளிலிருந்து 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிய சுமார் 1165 மாணாக்கர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கு தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) பாலசிங் பொன்ராஜ் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதன்மை விரிவுரையாளர் அருள் ஜார்ஜ் பீட்டர் முன்னிலை வகித்தார் . வாசுதேவநல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். மாணாக்கர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிமுறைகளை தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி டீன் டாக்டர். ராதாகிருஷ்ணன் ளியங்குடி வக்கீல் பிச்சையா பொறியாளர் வெங்கடேஷ் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராமநாதன் தங்கப்பழம் அகாடமி ஒருங்கிணைப்பாளர் குருநாதன் புளியங்குடி முதுகலை ஆசிரியர் குமரகுருபரன் மாவட்ட திட்ட மேலாளர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.குமரேசன் நன்றியுரை கூறினார். அனைத்து மாணாக்கர்களுக்கும் பேருந்துவசதி மதிய உணவு தேநீர் மற்றும் விழா ஏற்பாடுகளை தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரிமற்றும் தங்கப்பழம் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகம் சிறப்புடன் செய்துகொடுக்க விழா நிறைவுபெற்றது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago