Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விரைவில் வருகிறது

பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

உலகிலேயே அதிக வயது கொண்டவர் வாழ்ந்த நாடு

உலகிலேயே அதிக வயது கொண்ட மூதாட்டி வாழ்ந்த நாடு பிரான்ஸ்தான். ஜெனே லூயி கால்மென்ட் என்ற மூதாட்டி 1872 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 122 வயது வரை வாழ்ந்தார். 1997 இ்ல் மறைந்தார். அதிகாரப்பூர்வமாக அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற ஆவணப்படுத்தப்பட்டது இவரது வாழ்வாகும். மேலும் பிரான்சில் மக்களின் சராசரி ஆயுள் காலம் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம்். 2018 நிலவரப்படி சராசரி ஆயுள் பெண்களுக்கு 85.3 ஆண்டுகள், ஆண்களுக்கு 79.4 ஆண்டுகள். அதிக ஆயுள் கொண்ட மனிதர்கள் பட்டியலில் பிரான்ஸ் உலகில் 14 ஆவது இடத்தில் உள்ளது.

உடற்பயிற்சியால் நன்மை

போதிய உடற்பயிற்சி இன்மையால் முதுகுத்தண்டானது தனது செயல்திறனை இழக்க ஆரம்பிக்கிறது. மேலும் இடுப்பு எழும்பும், பந்து கின்ன மூட்டுக்களும், பாத எழும்புகளும், தோல்பட்டை மூட்டுக்களும், கழுத்து எழும்பும் பாதிக்கப்படுவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.

அமேசிங் அமேசான்

தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாககும். உலகின் 9 நாடுகளில் எல்லைகளுக்குள் விரிந்துள்ள அமேசான் காடுகள், 1300 வகை பறவை இனங்கள், 427 வகை பாலூட்டி இனங்கள், 2,200 மீன் இனங்கள் மற்றும் 50 ஆயிரம் வகையான தாவர வகைகளின் புகலிடமாக இருக்கிறது. அதில் 16 ஆயிரம் வகை மர வகைகள்உள்ளதாம். இந்த காடுகள் கடந்த 55 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இங்கு இதுவரை 11,000-த்துக்கும் மேற்பட்ட புதிய வகை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிக்கப்படாத மரங்கள் மற்றும் செடிகள் இருக்கலாம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் அடையாளம் காண இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலான கால அவகாசம் தேவைப்படுமாம்.

உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

இதுதான் காரணம்

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமான தொப்பை வரக் காரணம், அதிக பணிச்சுமையால், ஆண்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு தொப்பைக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகமாக பீர் குடிப்பதாலும், அதிக நேரம், உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும் ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago