முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

திபெத்தில் புல்லட் ரயில் சேவை

திபெத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் ரூ.4181 கோடி மதிப்பில் புல்லட் ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. தலைநகர் லாசாவில் தொடங்கி  Nyingchi நகர் வரையிலான 250 மைல் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக்கல் ரயில்தடம் 47 சுரங்க வழித்தடங்கள், 121 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்கிறது. மேலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 9840 அடி உயரத்திலேயே பெரும்பாலும் இந்த தடம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலில் தானியியங்கி முறையில் கோச்களுக்குள் இருக்கும் ஆக்ஸிசன் அளவை கண்டறியும் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இறைச்சியைத் தவிர்க்கனுமாம்

நாம் உண்ணும் இறைச்சி உணவு வகைகளை தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலை குறைக்க முடியுமாம். இதுகுறித்த புதிய ஆய்வில் மாட்டிறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகைளை உண்பதால் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG)அளவை குறைக்கும் என தெரிவிக்கிறது. ஒரு வேளை அமெரிக்கர்கள் தொடர்ந்து இறைச்சியை விட பீன்ஸ் உண்டால் 2020ம் ஆண்டுக்குள் 50 முதல் 75 சதவிகிதம் வெப்பமயமாதல் குறைவதை உணர முடியுமாம். மேலும், வெப்பமயமாதலை குறைக்க ஆட்டோமொபைல் சாதனங்களை குறைப்பது, அதன் உற்பத்தியை நிறுத்தவது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இதன் மூலமாகவே எளிதாக குறைக்கலாமாம். அமெரிக்கர்கள் இறைச்சியை வாங்க ஆர்வம் காட்டும் அளவுக்கு காய்கறிகளை வாங்குவதில்லை.

புதிய அவதாரம்

கலை,விஞ்ஞானம்,அறிவியல், என இருந்துவரும் ரோபோக்களின் சேவை தற்போது விவசாயத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய பணிகளையும் ரோபோவே செய்துள்ளது. இதற்கான சாதனையை இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன்கில் தலைமையிலான குழுவினர் படைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்தது. இவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியுமாம்.

தாகம் தீர்க்கும்

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

கன்ன சுருக்கங்களை வைத்து பொய் சொல்வதை கண்டு பிடிக்கும் கருவி

போலீஸாரின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையை கூறவில்லை என்றால் லை டிடெக்டர் என்ற கருவி மூலம் மருத்துவ ரீதியாக உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். பெரும்பாலான நாடுகளில் இந்த முறைக்கு அனுமதி கிடையாது. இது அந்த நபரின் அனுமதியின்றி மருந்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பலத்த எதிர்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை கழக பேராசிரியர் டினோ லெவி என்பவர் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது பொய் சொல்பவரின் கன்னங்களில் ஏற்படும் சுருக்கம் மற்றும் அதிர்வுகளை கணக்கிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்பதை காட்டிக் கொடுத்து விடும். இந்த தசை சுருக்கங்களை முன்பு எந்த சென்சராலும் கண்டறிய முடியவில்லை, ஆனால்,ஒரு இஸ்ரேல் நிறுவனத்துக்கு தனது புதுமையான எக்ஸ்ரோடு கருவியை விற்ற பேரா.யேல் ஹனைன் என்பவரின் கருவி இதை மிகச் சரியாக கணித்துள்ளது. சுமார் 75 சதவீத வெற்றியை இது அளித்துள்ளதாக அந்த குழுவினர் கூறுகின்றனர். இதற்காக முகத்தில் ஒட்டப்படும் சிறிய ஸ்டிக்கர்களில் இருக்கும் எக்ஸ்ரோடுகள் இவற்றை கணித்து சொல்லிவிடும் திறன் படைத்தவையாக உள்ளன. இனி வழக்கு விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என நம்பலாம்.

பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்திய வகை டால்பின்

அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago