முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானைக்கு மதம் பிடிக்குனு சொல்றாங்களே அப்படின்னா என்ன?

புதன்கிழமை, 1 ஜூன் 2022      பிரத்யேகமான      விலங்குகள்
photos

யானை ஒரு காட்டு விலங்கு. என்னதான் நாம் அதைப் பழக்கப்படுத்தி வளர்த்தாலும், அது ஒருபோதும் வீட்டு விலங்காகாது. அதற்குள் ஒரு காட்டுத்தன்மை இருந்துகொண்டேயிருக்கும். அதே சமயம் யானைகளைப் பழக்கி, மனிதர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே நம் நாட்டில் இருந்துவருகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, போர்களுக்குப் பயன்படுத்தி வந்த வரலாறு இருக்கிறது. யானை வளர்ப்பு என்பது தனித்துவமான கலை. அனைவராலும் அதை வளர்த்துவிட முடியாது. அதற்கு ஒரு பாரம்பர்ய அறிவு வேண்டும்.

தமிழ்நாட்டில், பழங்குடியின மக்களான குரும்பர் மற்றும் மலசர்கள்தான் வனத்துறை கேம்ப்களில் யானைப் பாகன்களாக இருந்துவருகிறார்கள். இந்தியாவில் காட்டு யானைகளைப் பிடித்து வளர்ப்பவர்கள்,யானைக்கு மதம் பிடிப்பது என்பது அதன் நோய் அல்ல... இயல்பு. ஆரோக்கியமான, பருவத்துக்கு வந்த ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மதக்காலம் வரும்.

நீங்க நினைக்குற மதமெல்லாம் இல்ல. இது வேற, இங்க மதம் அப்டிங்குறது முக்கியமான ஒன்னுஒரு உயிரியோட உணர்ச்சியின் வெளிப்பாடு தான் மதம்.

அடுத்து வர்ற சில விசயங்களை பாருங்க. மத்தத கடைசியா சொல்றேன். உடனே கடைசிக்கு போய்டாதீங்க. இடைலயே சொல்லிடுவேன். முதல்ல நாம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான தகவல் என்னன்னா? எந்த யானைக்கு மதம் பிடிக்கும் அப்டின்னு. என்னடா புதுசா உளருறன்னு நினைக்கக் கூடாது..

ஹா..ஹா.. ஆமாங்க. எல்லா யானைக்கும்லாம் மதம் பிடிக்காது. ஆண் யானைகளுக்கு மட்டுந்தான் பிடிக்கும். அதுலயும் காடுகள்லயும், யானை கூட்டத்த விட்டு தனியா சுத்திட்டிருக்கும் யானைக்கு மட்டும் தான் மதம் பிடிக்கும். அதுலயும் குறிப்பா மனுஷங்க பிடிச்சிட்டு வந்து வேலை செய்றதுக்காக வளக்குற யானைகளுக்கு தான் அதிகமா மதம் பிடிக்கும். அதனால தான் கோயில்ல, அப்புறம் ஊர்வலத்துல பயன்படுத்துற யானைகளுக்கு அதிகமா மதம் பிடிக்குது.

அப்பட்டமா சொல்லனும்னா

இந்த செயலை மனித சமூகம் யானைகளுக்கு ஏற்படுத்தும் மிருக வதை என்றும் சொல்லலாம். சரி இனி, அதுக்கு மதம்பிடிக்கப்போகுதுன்னு எப்படி கண்டுபிடிக்குறதுன்னு பார்ப்போம். அதுக்கு மதம் புடிக்குறதுக்கு முன்னாடி மதநீர் வழியும். மதநீர் அப்படின்னா...

மதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் இருந்து வழியும் நீர். இவை சுரக்கும் போது, யானைகள் ஆக்ரோஷமாகவும், ஆபத்தாகவும் மாறுகின்றன. இது ஆண் யானைகளின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர்

இவ்வாறாக, மதநீர் வழியும் காலத்தை தான் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது. டெஸ்டொஸ்டிரோன்[1] என்ற இயக்குநீர்(Hormone) மதம் பிடித்த யானைகளில், இயல்பான யானையை விட 60 மடங்கு அதிகமாக இருப்பதனை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அது மட்டுமில்லாம, வயதில் முதிர்ந்த ஆண் யானைகளை கூட்டத்தில் புகுத்தினால் இளம் ஆண் யானைகள் மதம் பிடிக்காதிருக்கின்றன என்றும் அவற்றின் அடங்கா குணமும் வெளிவராதென கண்டறிந்துள்ளனர். ச்சும்மாவா இல்லன்னா பெரிசுக வெளுவெளுன்னு வெளுத்துபுடுவாங்கள்ல..

மனித சமூகத்தில் இது போல் யாருக்காவது காமம் ஏற்படும்போது அந்த காமத்தை அடக்குவதற்கோ அல்லது அதை முறை தவறிய வழியில் அடைவதற்கோ பல மாற்று வழிகள் உண்டு.

ஆனால், யானைகளுக்கோ அது போல் சூழலை இயற்கையாக இறைவன் அமைக்கவில்லை. அதனால் தான் அதை வளர்த்துவோர் எளிதாக அந்த உணர்வை அறிந்து கொள்ள மதன நீர் சுரக்கும் விதத்தை தெரியும் வண்ணம் இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவைகளை புரிந்து அதற்கான முன் ஏற்பாடுகளை அதை வளர்த்தும் மனிதன் தான் அதற்கான மாற்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிர் பயம் இல்லன்னா, யானை மேல அக்கறை இருந்தா... பாகன் தான் இதனை கவனமாக கவனிக்க வேண்டும்...

இதை அறிந்தோ அறியாமலோ இருப்பதால் தான் திருவிழாக்களில் பல விதமான பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் அன்றாடம் மனித சமூகம் சந்தித்து கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago