முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்மி பியர்ஸ் சாக்லேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? | Interesting Facts of Gummy Bears Chocolate

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      பிரத்யேகமான      பொது
1

கடந்த நூற்றாண்டுகளாக ஹம்மி பியர்ஸ் சாக்லேட்டுகள் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தன. குழந்தைகள் சிறுவர்கள் மட்டுமின்றி சாக்லேட் விரும்பிகள் அனைவராலும் விரும்பி தின்னும் பண்டமாக ஹம்மி பியர்ஸ் இருந்தது. ஆடைகள், கலை, உணவு ஆகியவற்றுக்கு இணையான இடத்தை இந்த ஹம்மி பியர்ஸ் சாக்லேட்டுகளும் இடம் பிடித்திருந்தன என்றால் ஆச்சரியம் தானே... ஹம்மி பியர்ஸ் சாக்லேட் தற்போது தனது 100 ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

1922 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள போன் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஹரிபோ என்ற உணவகத்தின் உரிமையாளர் ஹன்ஸ் ரீகல் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஹரிபோ என்பது ஹன்ஸ் ரீகல் போன் என்பதன் சுருக்கமே.  எனவே அவரது பெயராலேயே அந்த நிறுவனத்துக்கும் பெயர் சூட்டப்பட்டது.

உண்மையிலேயே அந்த கால கட்டத்தில் லைவ் ஷோவாக நடத்தப்படும் நடனமாடும் கரடிகளின் நிகழ்ச்சியின் தாக்கத்தினாலேயே அவர் இப்படியொரு யோசனைக்கு வந்தார். அதனாலேயே அதற்கு ஒரிஜினலாக ஹம்மி பியர்ஸ் ட்ரீட் என்றே பெயரிடப்பட்டது. இந்த நிறுவனத்தை அவர் தொடங்கிய போது அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர் ஒரே ஒரு ஊழியர். அதுவும் அவரது மனைவி ஜெர்ட்ரூடு.

ஆனால் 1940களில் இவரது நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து அதில் சுமார் 400 பேர் வரை  பணியாற்றினர். 1945 இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன்கள் இந்த சாக்லேட் நிறுவனத்தை எடுத்து நடத்தினர்.சில ஹம்மி பியர்ஸ்களில் சுவைக்காக வண்ணங்களை சேர்ப்பது கிடையாது. குறிப்பாக நமக்கு மிகவும் பரிச்சயமான மிகப் பெரிய ஹம்மி கரடி பண்டங்களில். உதாரணமாக பச்சை நிறம் உண்மையில் ஸ்ட்ராபெர்ரியலிருந்தும், ஆரஞ்சு நிறம் அன்னாசியிலிருந்தும் செய்யப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பிரம்மாண்ட ஹம்மி பியர் சாக்லேட்டை இன்டெர்நெட் மூலமாக ஆன்லைனில் வாங்கி ஒரு பார்ட்டியையே நடத்தி விடலாம்.டிஸ்னியின் முதல் மிகப் பெரிய அனிமேஷன் சீரியல் ஹம்மி பியர்ஸை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. அதற்கு ஹம்மி பியர்ஸின் சாகசங்கள் என்றே பெயரிடப்பட்டது. அந்த அளவுக்கு ஹம்மி பியர்ஸ் கேண்டிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தன.

85 களில் இந்த கார்ட்டூன் சீரியல் டிவிக்களில் ஒளிபரப்பாகின. எவ்வளவு காலம் ஒளிபரப்பாகின தெரியுமா...சுமார் 6 ஆண்டுகள் இந்த கார்ட்டூன் சீரியல் சக்கை போடு போட்டது. 20களில் இவை தயாரான போதிலும் சுமார் 60 ஆண்டு காலம் அதாவது, 82 வரையில் அமெரிக்கர் இதை கையால் கூட தொடவில்லை.

பால்டிமோரில் அதன் கிளை தொடங்கப்பட்ட பிறகே, அமெரிக்க சந்தையிலும் ஹம்மி பியர் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.நம்மூர்களில் ஜெல்லி மிட்டாய் என்று அழைக்கப்படும் இந்த ஹம்மி கேண்டிகள் ஹம்மீஸ் என்றே உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றன.அதற்கு ஜெல்லி போன்ற தன்மையை அராபிய ஹம் தான் அப்படி ஒரு  பண்பை அளிப்பதால் அவை ஹம்மீஸ் என்றே அழைக்கப்படுகின்றன.

இன்றைய மிட்டாய்களின் உலகில் ஏராளமான ஹம்மி பியர்ஸ் கேண்டிகள் கிடைக்கின்றன. முன்பு கரடி உருவத்தில் மட்டும் இருந்த இந்த ஜெல்லி மிட்டாய்கள் இன்றைக்கு சுறா, பழங்கள் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. பேஷன் வடிவமைப்பாளர்கள் சுமார் 50 ஆயிரம் ஹம்மி பியர்ஸ் படங்களை பொறித்த ஆடைகளை வெளியிட்டனர். இறைச்சி அல்லது முட்டைக்கு பதிலாக ஹம்மி பியரை எடுத்துக்கொள்ளலாம் என்று கூட நம்பப்பட்டது. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் அதில் சிறிதளவு புரோட்டின் உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்டது. இதில் உள்ள ஸைலிட்டோல் ஹம்மை மெல்வதன் மூலம் பற்சிதைவிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இவற்றை குழந்தைகளுக்கும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே போல அவற்றை கலரை வைத்தும் இன்ன சுவை என்று மதிப்பிட முடியாது. உதாரணமாக பச்சை நிறத்தை அனைவரும் ஆப்பிள் அல்லது தர்பூசணி என்றே கருதுவர். ஆனால் உண்மயைில் அது ஸ்ட்ராபெர்ரி. அதே போலவே மற்ற வண்ணங்களும் உங்களை ஏமாற்றக் கூடும்.ஒரு கட்டத்தில் ஹம்மி பியர்ஸ் கேன்டியை வைத்து ஆபரணங்கள் கூட பேஷன் உலகில் வலம் வந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago