முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
  2. முட்டை - 4.
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2.
  4. பொடியாக நறுக்கிய பூண்டு - 4 பல். 
  5. மிளகு தூள் - சிறிதளவு.
  6. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
  7. பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
  8. மல்லி இலை - சிறிதளவு.
  9. எண்ணெய்  – 4 ஸ்பூன்.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 
செய்முறை ;--  

  1. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன்  எண்ணெய்யை ஊற்றவும்.
  2. எண்ணெய்  சூடானவுடன் நறுக்கிய1/2 கிலோ உருளைக்கிழங்கை  போட்டு நன்றாக வதக்கி கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  3. 5 நிமிடங்கள் கழித்து கடாயை திறந்து வேக வைத்த உருளைக்கிழங்கை கலந்து விட்டு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன்  எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள்,பொடியாக நறுக்கிய ஒரு சிகப்பு குடைமிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  7. 5 நிமிடங்கள் கழித்து கடாயை திறந்து பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து விடவும்.
  8. முட்டையை உடைத்து ஊற்ற 4 இடங்களில் ஸ்பூன் மூலம் சிறு சிறு குழிகளை தோண்டி அந்த இடத்தில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும்
  9. அதன் மேல் சிறிதளவு மிளகு தூளை தூவி விட்டு கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  10. 5 நிமிடங்கள் கழித்து கடாயை திறந்து சிறிதளவு மல்லி இலையை தூவி விடவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான சில்லி உருளைக்கிழங்கு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago