முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சூப்பர் சாஃப்ட் இட்லி

Cooking time in minutes: 
20
Ingredients: 

சூப்பர் சாஃப்ட் இட்லி செய்யத்தேவையான பொருட்கள்.

  1. பச்சரிசி - ஒரு கப்.
  2. ரவை - 5 கரண்டி.
  3. தயிர் - 200 மில்லி.
  4. சமையல் சோடா - 1/2 ஸ்பூன்.
  5. எண்ணெய் - ஒருஸ்பூன்.
  6. கடுகு,உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்.
  7. சீரகம் - 1/2 ஸ்பூன்.
  8. பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 துண்டு.
  9. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
  10. பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு.
  11. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  12. பொடியாக நறுக்கிய புதினா  இலை - சிறிதளவு.
  13. எண்ணெய் – 4 ஸ்பூன்.
  14. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;-- 

  1. ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்த ஒரு கப் பச்சரிசி,தயிர் 200 மில்லி, மற்றும் 1/2 ஸ்பூன் சமையல் சோடா ஆகியவற்றை போட்டு  நன்றாக  அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  2. இதனுடன்  5 கரண்டி ரவையை  போட்டு நன்றாக கலந்து விட்டு மாவை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்  சூடானவுடன் 1/2 ஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு,சீரகம் 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலை மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா இலையை போட்டு நன்றாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து  வைத்துக் கொள்ளவும்.
  6. ரவை கலந்து ஊற வைத்துள்ள மாவில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  7. இதனுடன் எண்ணெயில் தாளித்தவற்றை போட்டு கலந்து கொள்ளவும்.
  8. இதனுடன்பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலை,பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா இலை மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சியை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர்  ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்டாண்டு போட்டு தயார் செய்து வைத்துக்கொள்ளவும். 
  10. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய்யை தடவி அதை ஸ்டாண்டின் மேல் வைத்து தயார் செய்து வைத்துள்ள மாவை  ஊற்றி பரப்பி விட்டு கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  11. 10 நிமிடங்கள் கழித்து கடாயை திறந்து தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.
  12. சுவையான சூப்பர் சாஃப்ட் இட்லி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago