முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பட்டர் சிக்கன் ரோஸ்ட்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

பட்டர் சிக்கன் ரோஸ்ட் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. சிக்கன் லெக் பீஸ் - 2.
  2. சின்ன வெங்காயம் - 10
  3. தக்காளி - 2.
  4. இஞ்சி - சிறிதளவு.
  5. பூண்டு -6 பல்.
  6. பச்சை மிளகாய் - 2.
  7. கறிவேப்பிலை ,கொத்தமல்லி - சிறிதளவு.
  8. பட்டர் -2 ஸ்பூன்.
  9. பெருங்சீரகம் - 1/2 ஸ்பூன்.
  10. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்.
  11. மல்லி  தூள் - 2 ஸ்பூன்.
  12. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
  13. சிக்கன் மசாலா தூள் - 2 ஸ்பூன்.
  14. கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்.
  15. உப்பு -  தேவையான அளவு .

 

Method: 

 

செய்முறை ;

  1. பூண்டு 4 பல் மற்றும் சிறிதளவு இஞ்சி இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் லெக் பீஸ் 2 போடவும்.
  4. இதில் மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு  போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் பட்டர் போடவும்.
  6. பட்டர் சூடானவுடன் கறிவேப்பிலை சிறிதளவு மற்றும் நறுக்கி வைத்த 10 சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு  உப்பு போட்டு வதக்கவும்.
  8. பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  9. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,மல்லி  தூள் 2 ஸ்பூன்,
  10. சிக்கன் மசாலா தூள்  2 ஸ்பூன்,கரம் மசாலா தூள் 1 ஸ்பூன், அரைத்து
  11. வைத்துள்ள ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  12. ஊற வைத்துள்ள சிக்கன் லெக் பீஸ் 2 போட்டு வதக்கவும்.
  13. சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி போட்டு மூடி வேக வைக்கவும்.
  14. நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி விடவும்.
  15. அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான பட்டர் சிக்கன் ரோஸ்ட் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago