முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டன் கோலா உருண்டை

Cooking time in minutes: 
30
Ingredients: 

மட்டன் கோலா உருண்டை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. மட்டன் - 500 கிராம்.
  2. பொரிகடலை - 100 கிராம்.
  3. மிளகாய் வத்தல்  - 200 கிராம்.
  4. தேங்காய் சில்  - 5.
  5. பட்டை - 10 கிராம்.
  6. சோம்பு - 1 ஸ்பூன். 
  7. கிராம்பு – 2.
  8. முந்திரி பருப்பு – 3.
  9. பூண்டு - 6 பல்.
  10. ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி
  11. நறுக்கிய வெங்காயம் - 2.
  12. கருவேப்பில்லை, மல்லி - சிறிதளவு. 
  13. கசாகசா - ½ டேபிள் ஸ்பூன் 
  14. கான்பிளவர் மாவு - 1 ஸ்பூன் 
  15. உப்பு - தேவையான அளவு.
  16. மஞ்சள்தூள் -  சிறிதளவு. 
  17. பொரிகடலை மாவு - 1/2 ஸ்பூன்.
Method: 

செய்முறை ;

  1. மிக்சி ஜாரில் 100 கிராம் பொரிகடலையை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் 200 கிராம் மிளகாய் வத்தல், மற்றும் 5 தேங்காய் சில்லை போட்டு அரைத்து அரைக்கவும்.
  3. இதனுடன்  10 கிராம் பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு, 2 கிராம்பு போட்டு அரைக்கவும்.   
  4. இதனுடன் 3 முந்திரி பருப்பு 6 பல் பூண்டு   நறுக்கிய 2 வெங்காயம் சிறிது கருவேப்பில்லை, மல்லி இலை, ½ டேபிள் ஸ்பூன் கசாகசா ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. 500 கிராம் சுத்தம் செய்த மட்டனை எடுத்து நன்றாக பிழிந்து மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
  6. இதனுடன்  பொடியாக நறுக்கிய 2 வெங்காயம் சிறிது கருவேப்பில்லை, மல்லி இலை, ½ டேபிள் ஸ்பூன் கசாகசா ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  7. இதனுடன் மிக்கி ஜாரில் ஏற்கனவே அரைத்து வைத்த பொடியை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  8. ஒரு பாத்திரத்துல மிக்சியில அரைத்த மட்டனை போட்டு, 1/2 ஸ்பூன் பொரிகடலை மாவு, மற்றும்  சிறிதளவு  மஞ்சள்தூள் போட்டு கலந்து 
  9. வைத்துக்கொள்ளவும்.
  10. அரைத்து வைத்த மட்டன் கலவையை சிறு சிறு  உருண்டையாக  உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  11. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மட்டன் உருண்டைகளை  ஒவ்வொன்றாக போட்டு குறைவான தணலில் வறுக்கவும். 
  12. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  13. சுவையான மட்டன் கோலா உருண்டை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்