முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை ரோஸ்ட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

முட்டை ரோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை –  8.
  2. பட்டை – 1.
  3. ஏலக்காய் -2.
  4. கிராம்பு – 3.
  5. மிளகு - 1 ஸ்பூன்.
  6. அன்னாசிபூ - 1.
  7. மல்லி - 1 ஸ்பூன்.
  8. தேங்காய் துருவல் - 1/2 முடி.
  9. எண்ணெய் - 3 ஸ்பூன்.
  10. கறிவேப்பிலை - சிறிதளவு.
  11. பச்சை மிளகாய் - 3.
  12. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  13. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  14. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
  15. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  16. மல்லி இலை - சிறிதளவு.
  17. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி  8 முட்டைகள் மற்றும் சிறிதளவு உப்பை  போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 2  விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. முட்டையை சிறுது நேரம் ஆற வைத்து ஓடுகளை நீக்கி சுத்தம் செய்து  ஒரு முட்டையை நான்கு துண்டுகளாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு பட்டை,2 ஏலக்காய்,கிராம்பு 3,மிளகு ஒரு ஸ்பூன்,ஒரு அன்னாசிபூ,மல்லி ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக வறுக்கவும்.
  4. இதனுடன் 1/2 முடி தேங்காய் துருவலை போட்டு நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் துருவலை போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கறிவேப்பிலை,நறுக்கிய பச்சை மிளகாய் 3,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை நன்றாக போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும்  தேங்காய் விழுதை போட்டு நன்றாக  வதக்கவும்.
  10. நறுக்கி வைத்துள்ள முட்டைகளை கடாயில் உள்ள மசாலா கலவையில் ஒவ்வொன்றாக வைக்கவும்.
  11. மசாலா கலவை முட்டையின் முன்னும் பின்னும் அனைத்து பகுதிகளிலும் படும் படி மெதுவாக கலந்து விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான முட்டை சுக்கா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்