முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரைஸ் பக்கோடா

Cooking time in minutes: 
20
Ingredients: 

ரைஸ் பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்.

  1. அரிசி - 2 கப்.
  2. புதினா இலை - சிறிதளவு.
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  5. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  6. சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
  7. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
  8. சோம்புத்தூள் - ஒரு ஸ்பூன்.
  9. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
  10. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  11. கடலை  மாவு - 50 கிராம் .
  12. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  13. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து 2 கப் அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பை  போட்டு கலந்து விட்டு 4 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  2. இதனுடன் புதினா இலை சிறிதளவு,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் போட்டு கலந்து விட்வும்.
  3. இதனுடன் சோம்புத்தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,கடலை  மாவு  50 கிராம் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பை  போட்டு நன்றாக கலந்து விட்டு சாதத்தை நீளமாக உருட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் உருட்டி வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக போட்டு  பொரிக்கவும். 
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான ரைஸ் பக்கோடா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago