முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெற்றிலை வடை

Cooking time in minutes: 
20
Ingredients: 

வெற்றிலை வடை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய வெற்றிலை - 15.
  2. பாசி பயறு - 1 கப்.
  3. நல்லெண்னை - 500  மில்லி. 
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4.
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3.
  6. பொடியாக நறுக்கிய பூண்டு – 2.
  7. பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
  8. கறிவேப்பிலை - சிறிதளவு.
  9. கடலை மாவு - 1 ஸ்பூன்.
  10. மைதா மாவு - 1 ஸ்பூன்.
  11. உப்பு -  தேவையான அளவு .
Method: 

செய்முறை ;

  1. ஒரு கப் பாசி பயறை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்து, மிக்சி  ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பாசி பயறு மாவை ஊற்றவும், இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 4,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 3, பொடியாக நறுக்கிய பூண்டு 2,கறிவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விடவும்.
  3. இதனுடன் கடலை மாவு  ஒரு ஸ்பூன் மற்றும் மைதா மாவு  ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 500  மில்லி நல்லெண்னை  ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை வடைக்கு தட்டுவது போல் தட்டி ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். 
  6. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  7. சுவையான வெற்றிலை வடை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்