முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வேப்பம்பூ ரசம்.

Cooking time in minutes: 
20
Ingredients: 

வேப்பம்பூ ரசம் செய்யத்  தேவையான பொருள்கள்;

  1. வேப்பம் பூ - 1 கைப்பிடி அளவு 
  2. நெய்- 2 டீஸ்பூன்.
  3. பெருங்காயம்  - சிறிதளவு.
  4. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்.
  5. மிளகு -  1 ஸ்பூன்.
  6. சீரகம் - 1 ஸ்பூன்.
  7. பூண்டு - 8 பல்.
  8. கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு.
  9. மிளகாய் வத்தல் - 1.
  10. தக்காளி - 1.
  11. நல்லெண்ணெய் - சிறிதளவு.
  12. கடுகு-உளுந்து - 1 டீஸ்பூன்.
  13. சோம்பு - 1/4 டீஸ்பூன்.
  14. மிளகாய் வத்தல் - 3.
  15. பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 4.
  16. பொடியாக நறுக்கிய தக்காளி -  1.
  17. புளி - சிறிதளவு.
  18. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன். 
  19. எலுமிச்சை - 1/2 மூடி. 
  20. உப்பு  - தேவையான  அளவு.
Method: 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  3. நெய் சூடானவுடன், சிறிதளவு பெருங்காயம் மற்றும் 1/2 ஸ்பூன் கடலை பருப்புயை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. மிஸ்சி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு ,ஒரு ஸ்பூன் சீரகம், பூண்டு 8 பல்,கறிவேப்பிலை,மல்லி சிறிதளவு,ஒரு  மிளகாய் வத்தல்,ஒரு பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. மிஸ்சி ஜாரில் வறுத்த கடலைபருப்பை போட்டு  நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  7. நெய் சூடானவுடன்  ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூ போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் சிறிதளவு நல்லெண்ணெய்யை  ஊற்றவும்.
  9. எண்ணெய் சூடானவுடன்   1 டீஸ்பூன் கடுகு-உளுந்து, 1/4 டீஸ்பூன் சோம்பு போட்டு வதக்கவும்.
  10. இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு கருவேப்பிள்ளை மல்லி, 3 மிளகாய் வத்தல் பொடியாக நறுக்கிய 4 சின்னவெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், இதில் ஒரு தக்காளியை  போட்டு நன்றாக வதக்கவும். 
  11. இதனுடன் மிக்சியில அரைத்தவற்றை போட்டு வதக்கவும். 
  12. வதக்கி வைத்த வேப்பம் பூவையும் போட்டு வதக்கவும். 
  13. தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
  14. இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
  15. இதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு போட்டு கலந்து விட்டு ஒரு நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  16. இதனுடன் மிக்சியில அரைத்த கடலைபருப்பை போட்டு  கலந்து விட்டு ஒரு நிமிடம்  மூடி போட்டு மூடி மிதமானசூட்டில் கொதிக்க வைக்கவும்.
  17. அடுப்பை ஆப் செய்து விட்டு 1/2 மூடி எலுமிச்சை பழ சாறு பிழிந்து விடவும்.
  18. இப்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
  19. சுவையான  வேப்பம்பூ ரசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்