முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக

siddha-4

  1. சொறி,சிரங்கு,படை ஆற ;-- நில ஆவரை கியாழத்தை தடவி வர சொறி,சிரங்கு,படை ஆறும். 
  2. அரிப்பு குணமாக ;-- மாதுளம் பழச்சாறை புழுவெட்டு உள்ள இடத்தில்  தேய்க்க  அரிப்பு குணமாகும்.
  3. சிரங்கு ஊறல் குணமாக ;-- வெள்ளருகு சமூலத்தை அரைத்து வெந்நீரில் கலந்து பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சிரங்கு ஊறல் குணமாகும்.
  4. நரம்பு சிலந்தி குணமாக ;-- வேப்பம்பூ,வேப்பவிதை அரைத்து கட்ட  நரம்பு சிலந்தி   குணமாகும்.
  5. தோல் வியாதி தீர ;-- சிரட்டை தைலம் தோல் வியாதிகளுக்கு அருமையான மருந்து.
  6. சொறி,சிரங்கு தீர ;-- கொன்றை வேர் கஷாயம் குடித்து வர சொறி,சிரங்கு தீரும்.
  7. புண்,சிரங்கு குணமாக ;-- நுணா இலையை அரைத்து பற்றிட புண்,சிரங்கு குணமாகும்.
  8. சொறி, சிரங்கு குணமாக ;-- சடைச்சி வேரை மையாய் அரைத்து பூசி வர சொறி.சிரங்கு குணமாகும்.
  9. படர்தாமரை நீங்க ;-- சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழ சாற்றில் உரைத்து தடவ படர்தாமரை நீங்கும்.
  10. தோல் நோய் குணமாக ;-- தக்காளிக்காயை  சாப்பிட உடல் வீக்கம் தோல் நோய் குணமாகும்.
  11. குஷ்டம் குணமாக ;-- வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வர குஷ்டநோய் குணமாகும்.
  12. கரும்படை நீங்க ;-- ஜாதிக்காயை அரைத்து கரும்படை மீது சில நாட்கள் தடவி வர நீங்கும்.
  13. சொறி.சிரங்கு குணமாக ;-- அருகம்புல் தைலம் தேய்த்து குளித்து வர சொறி.சிரங்கு குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்