முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி

சனிக்கிழமை, 18 மே 2024      சினிமா
Pavitra-Sandhu 2024-05-18

Source: provided

ஐதராபாத் : டி.வி. தொடர்களில் நடித்து வந்த நடிகை கார் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து உடன் நடித்த நடிகரும் நேற்று தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு சின்னத்திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

கன்னடம் மற்றும் தெலுங்கு டி.வி. தொடர்களில் பிரபலமானவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் போது காரில் இருந்த பவித்ராவின் சகோதரி, நடிகர் சந்திரகாந்த் என்கிற சாந்து மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பவித்ராவின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொடரான  திரிநயனியில் பவித்ரா ஜெயராமின் கணவராக நடித்த சந்து, மணிகொண்டாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். 

கார் விபத்தில் பவித்ரா இறந்தார். ஒரு வாரத்திற்குள் இரண்டு பிரபலமான நடிகர்களை இழந்ததால் தெலுங்கு சின்னத்திரை அதிர்ச்சியில் உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து