முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 23 மே 2017
மேஷம்
aries-mesham
தங்கள் சம்பாத்திய நிலை உயரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மிகவும் கடினமான செயல்களைக் கூட எளிதாக, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் தல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
உறவுகளின் தொல்லையால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்குக் கடின உழைப்பு தேவை.
மிதுனம்
gemini-mithunum
தனலாபம் அதிகரிக்கும். வங்கிக் கடன்கள் சுலபமாக்க் கிடைக்கும். உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரிந்த தம்பதியர் இணைந்து மகிழ்வர். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
கன்னி
virgo-kanni
இஷ்டத்துக்கு மாறாகவே அனைத்துக் காரியங்களும் நடக்கும். வீண் வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு செவி சாய்ப்பது நல்லது.
மகரம்
capricorn-magaram
தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இல்லாத காரணத்தினால் மனக் கவலை அதிகரிக்கும். கடன் பட நேரும்.அதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும்.
கடகம்
cancer-kadagam
புதிய வேலைக்கான வாய்ப்பு உருவாகும். அரசு வேலைக்கான அழைப்பும் வரலாம். மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், தனலாபம் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
புனிதப் பயணங்கள், கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு, விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு உண்டு.
துலாம்
libra-thulam
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள்.
மீனம்
pisces-meenam
பணவரவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது. செலவுகள் கூடுவதால், குடும்பத்தில் நிம்மதி குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
கடினமாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்
scorpio-viruchagam
வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து, செல்வநிலை உயரும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர் கூடி பேரின்பங்காண்பர்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு அதிகரிக்கும். வெற்றிகள் குவிவதால், மனத் தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும்.
நாள்: Tuesday, May 23, 2017
  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
  • சிவன் கோவில்களில் இன்று மாலை நந்தீசுவரர் பெருமானுக்கு சிறப்பு அபிசேகம்.

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தனிமை கொல்லும்

சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

100-வது பிறந்த நாள்

பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நாளையுடன் 100 வயது ஆகிறது. தங்களது பிறந்த நாளை பெரிய விருந்துடன் அமர்க்களமாக கொண்டாட நினைத்த இச்சகோதரிகள் விழாவுக்கு 100 பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

புதிய உடை

கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உடையவர்கள் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு டி-சர்ட் உடையை உருவாக்கி உள்ளனர். இதை அணிந்து கொண்டால் சுவாச நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். டிசர்ட்டின் மேல் உள்ள கண்ணாடி இழையால் ஆன சிறிய ஆண்டனா சென்சாராகவும், கடத்தியாகவும் செயல்படுமாம்.

நம்பர் ஒன்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படும் குடிநீர் குறித்து கன்சுமர் வாய்ஸ் என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை மற்றும் தரமும் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

சசாங்காசனம்

சசாங்காசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இதனால், இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும். முதுகின் நரம்புகள் வலுப்பெறுவதால் முதுகு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.

புதிய டிரெண்ட்

எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லது எண்ணெய்

தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.