முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நோய்களை தடுக்க ...

குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். காஃபி போன்ற கேஃபைன் இருக்கும் உணவுப் பொருட்களை குறைத்தல், டிவி, செல்ஃபோன், கணினியை அணைத்துவிடுதல்,  இரவில் அதிகம் உணவை தவிர்த்தல், தினசரி உடற்பயிற்சி, தூங்கும் முன் குளிர்பானம் குடிப்பதை தவித்தல், அமைதியான சூழல் நல்ல தூக்கத்தை கொடுக்கும்

இந்தியாவின் முதல் ரயில் எங்கு ஓடியது

இந்திய ரயில்வே சுமார் 170 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது சரி இந்தியாவின் முதல் ரயில் எங்கே ஓடத் தொடங்கியது. அப்போது ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில் அது மும்பையில் நடந்தது. என்ன அது. இன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என மிக பிரமாண்டமாக மிளிரும் அந்த ரயில் நிலையம் அக்காலத்தில் மிகவும் சாதாரணமாக காணப்பட்டது. அதில்தான் இந்தியாவில் அன்றைய தினம் முதல் ரயில் தனது பயணத்தை தொடங்கியது.சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போரிபந்தர் மற்றும் தானே இடையே பயணிக்க165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு மெதுவான பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம்தான் எடுத்துக் கொள்கிறது.

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயை கண்டுபிடிக்க ...

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறியும் முறையாக, சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.

புதிய முயற்சி

முன்பு சல்பர் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்த நிலையில், கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு ஆய்வு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 5,208 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ஃபேஸ்புக்கில் சுயவிவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள் மற்றும் அதில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்களாம். இவர்கள் தான் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்