முகப்பு

வார ராசிபலன்

Weekly horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: Sunday, May 21, 2017 to Saturday, May 27, 2017
மேஷம்
aries-mesham

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி -  இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள்.

பரணி -  இந்த வாரம் தங்கள் சந்தோஷத் தருணங்களை குடும்பத்தாரோடு கழித்து மகிழ்வீர்கள். அதன் காரணமாக குடும்பத்தில் குதூகலம் நிலவும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். கடைசியில் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். அரசுப் பணியாளர்கள் அயராது உழைத்து உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, நலம் பெறுவீர்கள். திடீர்ப் பயணங்களின் போது முன்பதிவுக் குளறுபடிகளால் இடையூறுகள் ஏற்படும். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்பட்டு வருமானம் குறையும்.

கார்த்திகை 1 ஆம் பாதம்  —  இந்த வாரம் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த அளவு போதுமான வருமானங்கள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பச் சூழலில் சில சிரமங்கள் ஏற்படலாம். சிலருக்கு உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறுகள் எழலாம். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சொன்ன பேச்சுக் கேட்காத பிள்ளைகளின் செயல்களால் மன உளைச்சல் ஏற்படலாம். சிலருக்கு தேவதூதர்கள், மகான்களின் சந்திப்புக் கிடைத்து மனதில் அமைதி நிலவும். பொதுச்சேவை போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்
taurus-rishibum

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –   இந்த வாரம் விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வீட்டுச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்குக் கடன்கள் வாங்கும் நிலை ஏற்படலாம். சிலர் பழைய கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் சீர்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படாது இருக்கப் பிறரிடம் கோபத்தைக் காட்டாது அமைதியைக் கடைப்பிடியுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் சகோதரர்கள் கைகொடுப்பர். செலவுகள் அதிகரிக்கும் வகையில் தூரமான, துயரம் மிக்கப் பயணங்கள் தவிர்க்க முடியாததாகும்.

ரோகிணி –  இந்த வாரம் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். தீய நண்பர்களைவிட்டு ஒதுங்கினால் அவமானங்கள் ஏற்படாது தப்பிக்கலாம். ஓய்வின்றி உழைப்பதின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் அஜீரணத் தொல்லைகள் எழலாம். செலவுகள் அதிகமாகிப் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் –  இந்த வாரம் மேடைப் பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்கு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டும், பதவி உயர்வின் மூலமாகப் பணப்பயன்களை அடைவீர்கள். புதிய வியாபாரத் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் குவியும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் உதவியால் பதவி உயர்வுகள் கிடைக்கலாம். சிலருக்குக் கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும், பெருமையும் சேரலாம். வீட்டில் உள்ளவர்கள் மீது வீணான கோபத்தைத் தவிருங்கள்

மிதுனம்
gemini-mithunum

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்  -  இந்த வாரம் மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள். வரவை விடச் செலவுகள் அதிகரிக்குமாதலால், பிறரிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். சிலருக்குப் பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம். அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் ஏற்படும் பின்னடைவு காரணமாகப் பணவரவுகளில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். புதிய தொழில் தொடர்புகள் ஏற்படலாம்.

திருவாதிரை -  இந்த வாரம் வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படும். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்  -  இந்த வாரம் பணம் எனும் மழைப் பொழிவு போதுமான அளவு விட்டு விட்டு இருக்கும். அதன் காரணமாக வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும் பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம்.

கன்னி
virgo-kanni

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்  -  இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடனுதவிகள் தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசுத் துறையினரால் அச்சம் ஏற்படலாம். திட்டமிடப்பட்ட செயல்களில் பிறரால் தடைகள் ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.

ஹஸ்தம்  –  இந்த வாரம் எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பயணங்களில் இடையூறுகள் ஏற்படலாம். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் வரலாம்.

சித்திரை – 1,2 பாதங்கள் –  இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். அதன் காரணமாகச் சிலருக்குக் கடன் வாங்க நேரலாம். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும்.

மகரம்
capricorn-magaram

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் -  இந்த வாரம் மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.

திருவோணம்  -   இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும். தங்கள் மதிப்பு, கௌரவம் ஆகியவை உயரும். பருவநிலை காரணமாக சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும். சிலரின் சுறுசுறுப்பற்ற நிலையால், காரியத்தடைகள், தாமதங்கள் ஏற்படலாம்.

அவிட்டம் 1,2 பாதங்கள் –  இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். எதற்கும் அவசரப்படாதீர்கள். பதறாத காரியம் சிதறாது முடியும் என்பதால், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமின்றிப் பொறுமையாகச் செய்தால் வெற்றி நிச்சியம். தங்கள் தனித் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும்.

கடகம்
cancer-kadagam

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்  -  இந்த வாரம் பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். காணாமல்போன பொருட்கள் சேதாரமின்றி கைக்கு வந்து சேரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், மாணவர்களுக்கு விளையாட்டு, தொலைக்காட்சி, கை பேசி ஆகியவற்றால் ஏற்படும், கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.

பூசம் -  இந்த வாரம் சினிமா, கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனப் பொழுது மகிழ்ச்சியாகக் கழியும். தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். ஆயினும், எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். மாணவர்கள் ஆழ்ந்து கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். அதன் காரணமாகக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

ஆயில்யம் –  இந்த வாரம் கணவன், மனைவிக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். வீட்டில் உறவுகளுக்கு இடையே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

சிம்மம்
leo-simmam

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –  இந்த வாரம் பணவரவு அதிகரித்தாலும், புதிய உறவுகளுடனான உல்லாசப் பொழுது போக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வைத்தியச் செலவுகள் கூடலாம்.

பூரம் –  இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக கோபமும், உணவின் மீதும் வெறுப்பும் ஏற்படலாம். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும்.

உத்திரம்- 1 பாதம்  –  இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். வார மத்தியில் உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். சிலருக்குப் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம்.

துலாம்
libra-thulam

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –  இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடிவரும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.

சுவாதி –  இந்த வாரம் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தானதருமங்கள் செய்ய முற்படுவீர்கள். அனைத்துப் பணிகளிலும் மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள்  –  இந்த வாரம் தெய்வ தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். சிலருக்குத் தீயோரின் செயல் கண்டு ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். கல்வியில் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படும். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. புதிதாகத் திட்டமிடும் வியாபார முயற்சிகள் வெற்றி அடைந்து, ஆதாயம் தரும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.

மீனம்
pisces-meenam

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –  இந்த வாரம் உங்கள் கீர்த்தி பெருகும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பணியில் முழுக் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் உயிரைக் கொடுத்து உழைத்தாலும், மேலதிகாரி அதில் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆயினும் சகப் பணியாளர்களின் உதவியால் சமாளித்துவிடுவீர்கள்.

உத்திரட்டாதி  -  இந்த வாரம் விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அரசு வேலையில் அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.

ரேவதி -  இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசுவகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும். இதுவரை எட்டாதிருந்த கனிகளெல்லாம் எட்டும். அதாவது நீங்கள் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.

தனுசு
sagittarius-thanusu

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –  இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவசியம். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அதைத் தக்க வைக்கக் கடின உழைப்புத் தேவை. விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். உங்கள் உடன்பிறப்புக்களின் தீய நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

பூராடம்  –  இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும் பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதுநாள் வரையில் இழுபறியாக இருந்த வழக்குகள் பைசலாகும்.

உத்திராடம் –1 ஆம் பாதம்  –  இந்த வாரம் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பீர்கள். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். கற்பனை வளம் பெருகும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள் முன் கோபத்தைக் குறைத்தால் தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்
scorpio-viruchagam

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்  –  இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். சிலருக்கு ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அனுஷம்   –  இந்த வாரம் அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக இலாபங்களை அடைவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும்.

கேட்டை  –  இந்த வாரம் நீண்டநாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். துவக்கத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம். பழைய கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.

கும்பம்
aquarius-kumbam

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள் — இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். புதிய கொள் முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்குப் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம்.

சதயம்  -  இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டுப் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேக சுகம் குறையும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் ஓரளவு இழப்பைத் தவிர்க்கலாம்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –  இந்த வாரம் பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தனிமை கொல்லும்

சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

100-வது பிறந்த நாள்

பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நாளையுடன் 100 வயது ஆகிறது. தங்களது பிறந்த நாளை பெரிய விருந்துடன் அமர்க்களமாக கொண்டாட நினைத்த இச்சகோதரிகள் விழாவுக்கு 100 பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

புதிய உடை

கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உடையவர்கள் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு டி-சர்ட் உடையை உருவாக்கி உள்ளனர். இதை அணிந்து கொண்டால் சுவாச நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். டிசர்ட்டின் மேல் உள்ள கண்ணாடி இழையால் ஆன சிறிய ஆண்டனா சென்சாராகவும், கடத்தியாகவும் செயல்படுமாம்.

நம்பர் ஒன்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படும் குடிநீர் குறித்து கன்சுமர் வாய்ஸ் என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை மற்றும் தரமும் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

சசாங்காசனம்

சசாங்காசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இதனால், இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும். முதுகின் நரம்புகள் வலுப்பெறுவதால் முதுகு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.

புதிய டிரெண்ட்

எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லது எண்ணெய்

தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.