முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது

சனிக்கிழமை, 4 மே 2024      உலகம்
Accident-1

Source: provided

ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்குழந்தை பலியாகியிருக்கிறது.

முதலில் அவர்களது அடையாளம் வெளியிடப்படாத நிலையில், டோரன்டோவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் தகவலில், 401 தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந் மணிவண்ணன் - மகாலட்சுமி மற்றும் அவர்களது பேரக்குழந்தை பலியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்யப்படும் என்றும், கனடா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க, சாலையின் எதிர் திசையில், மதுபானக் கடையில் கொள்ளையடித்த திருடர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கு டோரண்டோவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் திருடர்கள் வந்த வாகனத்தால், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து நேரிட்டது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் ஒன்டாரியோ சிறப்புப் புலனாய்வு குழுவினர் கூறுகையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்த தம்பதி பலியாகினர். பலியானவர்களில் 60 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 3 மாத பேரக் குழந்தையும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இந்த விபத்தினால், 401 எண்கொண்ட நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே வாகனத்தில் பயணித்த, குழந்தையின் 33 வயது தந்தை மற்றும் 27 வயது தாய் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தாய் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 6 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாகவும் மற்றொரு வாகனத்தில் வந்த ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் ஒன்டாரியோ சிறப்புப் புலனாய்வு குழுவினர் கூறுகையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்த தம்பதி பலியாகினர். பலியானவர்களில் 60 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 3 மாத பேரக் குழந்தையும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இந்த விபத்தினால், 401 எண்கொண்ட நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து