முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று குறைந்தது

சனிக்கிழமை, 4 மே 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,600-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கும் விற்பனையானது. அதேபோன்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.86.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயா்ந்து ரூ.86,900-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து