முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி

சனிக்கிழமை, 4 மே 2024      விளையாட்டு
4-Ram-53

Source: provided

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.

மும்பை பந்துவீச்சு...

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.

ரசல் ரன் அவுட்...

பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் - மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

மும்பை தடுமாற்றம்...

இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியை போல மும்பை அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (11), இஷான் கிஷன் (13), திலக் வர்மா (4), நமன் திர் (11), நேஹல் வதேரா (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பாண்ட்யா (1) வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதனால் மும்பை அணி 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. எனினும், சூர்யகுமார் யாதவ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடித்த அவர், 56 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டிம் டேவிட்டும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

முடிவுக்கு வந்தது...

இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. கொல்கத்தா தரப்பில் மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 3 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அத்துடன், மும்பை அணியின் பிளே ஆப் கனவும் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

வென்றுவிட்டோம்

ஐபிஎல் போட்டியின் 51-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வென்றது. இதனை அடுத்து கேகேஆர் அணியின் உரிமையாளர் பிரபல நடிகர் ஷாருக்கான். அவரது மகள் சுஹானா கான் இந்த வெற்றிக் குறித்து இன்ஸ்டாகிராமில், “இறுதியாக வென்றுவிட்டோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து