எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை - டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஏஒ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.
இதற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |