தற்போது கோவிட் - 19 என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உருப்பெற்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோர் இதற்கு பலியாயினர். உயிரை காப்பாற்றிய சின்ட்ரோம் கே நோய் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் யூதர்களை கொத்து கொத்தாக குறிவைத்து கொலை செய்தனர். அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக சின்ட்ரோம் கே என்ற போலியான நோய் ஒன்று இருப்பதாக இத்தாலி டாக்டர்கள் பரப்பினர். இதன் மூலம் மருத்துவமனைக்கு வந்த யூதர்களை அவர்கள் நாஸிக்களிடமிருந்து காப்பாற்றினர். இதனால் யூதர்களை அங்கு தனிமைப்படுத்தி டாக்டர்கள் பாதுகாத்தனர். அவர்களை தொடர்பு கொண்டால் அந்த கொடிய நோயால் நாமும் மரணித்து விடுவோம் என உண்மையாகவே நாஸிக்கள் அஞ்சி யூதர்களை நெருங்கவில்லை.
சீனாவைச் சேர்ந்தவர் வாங் என்லின். இவர் 3 வகுப்பை கூட நிறைவு செய்யாதவர். ஆனால் இவர் தனக்கு தானே 16 ஆண்டுகள் சட்டம் பயின்றார். எதற்கு மற்றும் எப்படி தெரியுமா.. அவரது கிராமத்தை அருகில் இருந்த ரசாயன ஆலை மாசுபடுத்தியது. அதற்கு எதிராக சட்டப் போர் தொடுக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரால் அனைத்து சட்ட நூல்களையும் வாங்க பணமில்லை. எனவே உள்ளூரில் உள்ள புத்தக கடையில் பை நிறைய மக்காசோளத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அங்கேயே அமர்ந்து புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்து கொண்டார். டிக்சனரியின் உதவியால் அவர் சட்டம் பயின்று வழக்கையும் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றார். இறுதியில் தனது வழக்கில் கடந்த 2017 இல் வெற்றியும் பெற்றார் என்றால் ஆச்சரியம் தானே.
9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. இவர்கள் 30 ஆண்டுகளாக ரகசியமாக சமூக சேவையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இவ்வாறு சமூக சேவையில் ஈடுபடும் விஷயம் அவர்களது கணவன்மார்களுக்கு கூட தெரியாது. அவர்கள் அனைவரும் அதிகாலை 4 மணிக்கு ரகசியமாக சந்தித்து கொள்வர். தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை போன்ற தங்களால் ஆன சேவைகளை செய்து வந்தனர். இவை அனைத்தையும் தங்களது வீடுகளிலேயே தயாரித்து கொண்டு வந்தும் கொடுத்தனர். அவர்கள் அளிக்கும் அந்த பைகளில் உங்களை சிலர் நேசிக்கின்றனர் என எழுதப்பட்டிருக்கும் என்றால் ஆச்சரியம் தானே..
டெஸ்பரேடோ போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகரான ஸ்டீவ் பஸ்செமி. இவர் 1980 முதல் 1984 வரையிலும் நியூயூார்க் நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் பணியாற்றினார். பின்னர் நடிகராகி பெரும் பணமும் புகழும் ஈட்டினார். இந்த சூழலில் நியூயார்க் நகரில் செப்டம்பர் 2011 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, இவர் தானாகவே விரும்பி சென்று தீயணைப்பு சேவைகளில் ஈடுபட்டார். இதற்காக சக வீரர்களுடன் இணைந்து சுமார் 12 மணி நேரம் வரையிலும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். செப்டம்பர் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் என்றால் ஆச்சரியம் தானே..
சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த பழத்தையும் விலைக்கு வாங்கலாம். அதிலும் குறிப்பாக ஆப்பிள்கள் விற்காத சூப்பர் மார்க்கெட்களோ, ஸ்டோர்களோ இருக்க முடியாது. ஆனால் அவை பறித்து ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றனவாம். ஆப்பிள்கள் பொதுவாக ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் மாதங்களில்தான் அறுவடை சீசன். அவை பறிக்கப்பட்டு, வேக்ஸ் தடவி,் சூடான காற்றில் காய வைத்து குளீருட்டப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை பேக் செய்யப்பட்டு நம்மூர் சூப்பர் மார்க்கெட்களை அடைய 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட ஆகுமாம்.
பலரை நாம் பார்த்திருக்கலாம். எப்போதும் ஏதேனும் ஒரு மெட்டை வாயால் ஹம் செய்து கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ ஹம் செய்தபடியே வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ...உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். அதாவது மூக்கை விரல்களால் இறுக்கமாக மூடிக் கொண்டு நம்மால் ஹம் செய்ய முடியாது. வேண்டுமானால் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() 1 month 2 weeks ago |
1 month 2 weeks ago |
1 month 3 weeks ago |
1 month 3 weeks ago |
1 month 4 weeks ago |
2 months 4 hours ago |