முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 1 அக்டோபர் 2020
மேஷம்
aries-mesham
வீண்வம்புக்குச் செல்லாதிருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு அதிகரிக்கும். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூட உடல் நலம் பெற்று படுக்கையை விட்டுத் துள்ளி எழுவர்.
மிதுனம்
gemini-mithunum
வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் இனிய திருப்பங்களும் ஏற்படும். அரசு உதவிகள், புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
கன்னி
virgo-kanni
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். பலவகைகளில் மனைவி உதவுவாள்.
கடகம்
cancer-kadagam
தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனித பயணங்கள் மேற்கோள்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
எவரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
துலாம்
libra-thulam
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு வாங்கும் எண்ணம் எழும். குடும்பத்தில் சுபகாரியக் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
மீனம்
pisces-meenam
தனவரவு ஏற்பட்டு மகிழும் நாள். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். நீர் நிலைகளில் கவனமுடன் இருங்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தங்கள் பொருட்களைக் கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாள். பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. வியாபாரிகளுக்குத் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிட்டாது.
கும்பம்
aquarius-kumbam
கவனமாகப் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களைத் தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்புத் தேவை.
நாள்: Thursday, October 1, 2020
  • கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனம்.
  • திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
  • அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில பௌர்ணமி பூஜை. சிறப்பு அபிசேகம். ஆராதனை. அறுபத்து மூவர் நாயன்மார்கள் குருபூஜை செய்தருளிய காட்சி.