முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

'மாஸ்பெக் பேனா'

நமது உடலில் பத்து நொடிகளில் புற்று நோய் இருப்பதை கண்டறியும் புதிய வகை பேனா ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு 'மாஸ்பெக் பேனா' என்று பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் புற்றுநோய் கட்டி கண்டறியப்படுவதுடன், அதனை அகற்றவும் முடியும் என்கின்றனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் சில புற்று நோய் அணுக்கள் உடலில் தேங்கியிருக்கும். இந்த பாதிப்பை மாஸ்பெக் பேனா மூலம் சரி செய்ய முடியுமாம். அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். அதன்பின் அங்கிருக்கும் திசுக்கள் புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது 96 சதவிகிதம் தெரிந்துவிடும்.

இணையம் வருவதற்கு முன்பே இமெயில்

இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www  என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.

முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தின் சிறப்பு என்ன தெரியுமா.. இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடைய ஓடும் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் காந்தி நகரே முழுமையாக பெண்களை கொண்ட முதல் ரயில் நிலையம். கடந்த 2019 பிப்ரவரி மாத இறுதியில் இது செயலுக்கு வந்ததுடன் 40க்கும் மேலான பெண் ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூமிக்கு ஆபத்து

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony