முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 வது முறையாக அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதாவுக்கு அதிமுக பொதுக்குழு வாழ்த்து

வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஏழாவது முறையாக அதிமுக பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக பொதுக்குழுவில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள்அனைவராலும் 7-ஆவது முறையாக, அதிமுகவின் பொதுச் செயலாளராக,ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பொதுக்குழுதனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கிறது.அதிமுக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்குஒரு முறை நடத்திட வேண்டும்"" என்ற அதிமுக சட்ட திட்ட விதியின்படி, ஒரு முறை நடத்திட வேண்டும்2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலுமான, கழகத்தின் பல்வேறுநிர்வாக நிலைகளுக்கும் முறையாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு,அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் அவரவர்பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வருவதை, இந்தப் பொதுக்குழுமுழுமையாக ஏற்று அங்கீகரிக்கிறது.

அதிமுக அமைப்புத்தேர்தல்களை அமைதியாகவும், அனைவரது மனமும் குளிரும்வண்ணமும் சிறப்புற நடத்திக் காட்டியிருக்கும், அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு இந்தப் பொதுக்குழு தனது நெஞ்சார்ந்தநன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.முதலமைச்சர் ஜெயலலிதா இறை அருளால் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மீண்டும்பதவியேற்றிருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்தமகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும்இந்தப் பொதுக்குழு, அதிமுக பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாஇன்னும் பல்லாண்டுகாலம் தமிழக மக்களின் நலனுக்கென பணியாற்றிட தனதுநெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துமகிழ்கிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில்அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு 1,60,432 வாக்குகளை அளித்து, 1,50,722 வாக்குகள்வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை வழங்கி இருக்கும்வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் இந்தப் பொதுக்குழு தனதுநெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.இந்த தீர்மானத்தை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்மொழிய பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 2 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago