முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுத்திட எளிய வழிகள்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம்.

ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவ வே‌ண்டு‌ம்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

சுகாதாரமாக வாழு‌ங்க‌ள் : தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள். இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள். சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள். மது அருந்த வே‌ண்டா‌ம. மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள். இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ல்வதை த‌விரு‌ங்க‌ள் : தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள். வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கினால் நல்லது. வாழ்க நலமுடன்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago