எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் போலியோ சொட்டு மருந்து வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததவாது-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை இன்றையதினம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1087 மையங்களும், நகர்புறங்களில் 202 மையங்களும் என 1,289 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 2.00 இலட்சம் குழந்தைகள் பயன் பெறவுள்ளனர். இவர்களில் 10,089 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்களுக்கு 104 மையங்களிலும், 6 நடமாடும் மையங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 751 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 30 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 62 மையங்கள் மற்றும் 23 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கு அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,234 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு 97 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது.
அனைத்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும், முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான இன்றும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்களது குழந்தைகளுக்கு போலியோ வராமல் பாதுகாக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் தவணையானது வரும் 30.04.2017 அன்று நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர், நர்மதாதேவி, இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.த.கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பெ.பாலுசாமி, உறைவிட மருத்துவ அலுவலர் அரங்கநாயகி, மருத்துவமனை கண்காணிப்பாளர் லட்சுமி, துறை சார்ந்த அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026


