எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மரணத்தின் பின் உண்மையில் என்னதான் நடக்கின்றது? இதை எவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது? யாருக்கு தான் சுவாரசியம் இருக்காது. ஆனால் யார்தான் அதனை முயற்சி செய்வது. இருந்தும் இவை யாவும் காலங்காலமாக நடந்து வருகின்ற ஓர் விசயம் என்றால் சந்தேகம் இன்றி நீங்கள் நம்பிவீர்களா? ஆனால் அதுவே உண்மை அவ்வாறான விஷ பரீட்சைகள் இன்றளவும் நடந்தது கொண்டுதான் இருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் 1944 ஆம் ஆண்டு முதலே ஆரம்பித்து விட்டன. 1944ஆம் ஆண்டு மனோதத்துவ நிபுணர் கார்ல் ஜங் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட மரண அனுபவத்தை தனது சுய சரிதையில் விளக்கமாக எழுதியுள்ளார். அவரது கருத்துகளில் சிலவற்றும் பிற்கால ஆராய்ச்சியாளர்களின் தொகுப்போடு பொருந்தி போகின்றது.
அதைவிட சுவாரசியமான விசயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியை தொலைவில் இருந்து பார்த்த வியக்கத்தக்க காட் சியையும் எழுதியுள்ளார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு சென்று மனிதன் பார்த்த காட்சியும், அக்காட்சியும் ஒத்து போனது என்பது தான் மிக பெரிய ஆச்சரியம்.
இவ்வாறான நிகழ்வுகளில் ஆர்வம் கொண்ட ஆராய்சியாளர்கள் இது கற்பனையா அல்லது நிஜமா என அறிய விரும்பினர். இதன்பின் மரண விளிம்பை சந்தித்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டாலும் மரணத்திற்கு பின்னரான கேள்விக்கு முழுமையான விடைகள் கிடைக்க பெறவில்லை. இருந்தும் அந்த சில நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டுபிடித் தது.
இவ்வாறான ஆராய்ச்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும் டாக்டர் ரேமண்ட் மூடி 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக் குப்பின் வாழ்க்கை என்ற புத்தகம் வெளியான பின்பு தான் இதன் ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது. இவர் இந்த நூலுக்காக 150 தனி நபர்களின் அனுபவங்களை பயன் படுத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்று பட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார்.
1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியினை கேட்டு உணர்தல் : ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும் குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.
2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் : கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலை பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாக தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலை தெளிவாகப் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்கள்.
3) அமைதியும் வலியின்மையும் : மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்த கணத்தில் குறித்த வலி மறைந்து விடுவதோடு பேரமைதி கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
4) சுரங்க வழிப்பாதை அனுபவம் : பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்க வழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப்பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.
5) பூமியைப் பார்த்தல் : சிலர் சுரங்க வழிப்பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்ட சராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போனது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
6) ஒளி மனிதர்களைக் காணுதல் : சுரங்க வழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப்போன சொர்க்க பூமியில் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்யிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒரு சில நண்பர்களையும், நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.
7) அருட் பெரும் ஜோதியைக் காணுதல் : ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியை பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும்போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்.
8) வாழ்ந்த வாழ்க்கையை பர சீலித்தல் : அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண கூடியதாகவும் அமைந்ததாம்.
9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என தெரிவிக்கப்படல் : அந்த தெய்வீகப் பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னம் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாக சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.
என்ன வாசித்த பின் கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திர குப்தன் கணக்கு படித்தது போல் உணர்கின்றீர்களா ? சில நேரங்களில் நாம் சிறு வயதில் வாசித்து வந்த கதைகளும் உண்மை போலும், எதற்கு சந்தேகம் எப்படியும் ஒரு நாள் சந்திக்க தான் போகின்றோம். அன்று பார்த்துக் கொள்வோம். மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
05 Feb 2026


