எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று முன்தினம் தொடங்கி, 28-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வாட்டி வதைக்கும் இந்த வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர் பாலாஜி சில யோசனைகளை வழங்கியுள்ளார்.
காற்றோட்டமான ஆடைகள், நீர்ச்சத்து நிறைந்த உணவு, சரியான நேரத்தில் விளையாட்டு என பட்டியலிட்டுள்ளார் குழந்தைகள் நல மருத்துவர் பாலாஜி. வாட்டும் வெயிலும் இயற்கையே. இயற்கையை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால், அதன் சீற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் நம்மால் காப்பாற்ற முடியும்.
பருத்தி ஆடைகள் உகந்தது : பள்ளிக்கு அன்றாடம் சீருடையில் செல்லும் குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகளை அணிவித்துப் பார்க்க ஆசையிருக்கலாம். அதற்காக பட்டாடைகளையும் வெல்வெட் ஆடைகளையும் வெயில் காலத்தில் உடுத்தக்கூடாது. பருத்தி ஆடைகளே இந்த வெயிலுக்கு உகந்தது. அதுவும் இறுக்கமாக இல்லாமல் சற்றே தளர்வாக ஆடைகளை அணிவிக்க வேண்டும். எண்ணை பொரித்த உணவு கூடாது.
எண்ணெயில் பொரித்த காரமான உணவு வகைகள் கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், மோர், பழச்சாறு, பழங்கள் ஏற்புடையது. கூழ் வகைகள் உட்கொள்ளலாம். சாப்பிடும் முன் கைகழுவும் பழக்கத்தால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களை தவிர்க்க முடியும். வெயில் காலத்தில் அம்மை நோய்களும், காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் தாக்கும். அம்மை நோய்களுக்கு தடுப்பூசி இருப்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம். தேவையற்ற அசவுகரியங்களை இதனால் தடுக்கலாம்.
இருமுறை குளிக்கலாம் : குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் இந்த வெயில் காலத்தில் இருமுறை குளித்து உடல் வெப்பத்தை குறைக்கலாம். சாதாரண சோப்பு மட்டுமே போதுமானது. குளித்த பிறகு பவுடர் போடுவதை தவிர்க்க வேண்டும். நம் சருமத்தில் சிறிய நுண் துளைகள் இருக்கும். நாம் வியர்க்குரு பவுடர் போடுவதால் அந்தத் துகள்கள் மூடப்படும். இதனால் வெப்பம் வெளியேறாமல் சரும நோய்கள் ஏற்படும். வியர்வை வெளியேறுவது நல்லது. அதை தடுக்கும் வகையில் பவுடர், சந்தனம், வாசனை திரவியங்கள் என எந்தப் பூச்சும் கூடாது.
ஜன்னக்காற்று போதும் : குளிர்சாதனம் ஆபீஸ் முதல் வீடுவரை ஆக்கிரமித்திருக்கிறது. குளிர்சாதனம் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை சீரான வெப்பநிலையில் இயக்க வேண்டும். நேரடியாக ஏசி காற்று முகத்தில்படும்படி படுக்க வேண்டாம். குழந்தைகளைப் பெரும்பாலும் ஏசி காற்றுக்கு பழக்கப்படுத்தாமல் ஜன்னலை திறந்துவைத்து மின்விசிறியைப் பயன்படுத்துவது நல்லது.
வெயில் காலம்தான் குழந்தைகளுக்கு விடுமுறை காலமாக இருக்கிறது. அவர்கள் விளையாட்டுக்குத் தடை போட முடியாது. ஆனால், கத்திரி வெயில் காலத்தில் காலை 9 மணிக்கு மேல் வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அதேபோல், மாலை 5 மணிக்கு மேல்தான் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
பச்சிளங் குழந்தைகளுக்கு பவுடர் கூடாது : பச்சிளங் குழந்தைகள் வீட்டில்தான் இருக்கப்போகிறார்கள் என்பதால் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. 6 மாதம் வரை இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பிக்கும்போது இந்த வெயில் காலத்தில் பழச்சாறு கொடுக்கலாம்.
இந்தக் குழந்தைகளுக்கும் பருத்தி ஆடையே சிறந்தது. குளியலுக்குப் பின்னர் பவுடர் போடுவதை தவிர்த்துவிடவும். இவ்வாறு மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
05 Feb 2026


