எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது.
இந்தியாவின் மொத்தப் பரப்பபில் 75 சதம் மானாவாரி நிலமாகும். தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் சுமார் 50 சதம் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரியாக பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இதற்குக் காரணம் பருவம் தவறிய மழை, மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழைப்பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு - போன்றவையாகும்.
எனவே, நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில உத்திகளைப் பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தைப் பெறலாம். இதில் முக்கியமானது ஊட்டமேற்றிய தொழு உரமாகும். மண் வளப் பராமரிப்பு வேளாண்பயிர்களின் விளைச்சலில் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. . மண்ணில் உள்ள சத்துக்களில் மணிச்சத்தானது பயிர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் சத்தாகும். குறிப்பாக பயிர்கள் வேரூன்றி செழித்து வளர மணிச்சத்தானது மிக அவசியமாகிறது. மண்ணில் காணப்படும். தழைச்சத்தும் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் இருப்பதில்லை. இந்த ஊட்டச்சத்துக்களை ஊட்டமேற்றிய தொழுஉரம் மூலமாக இடுவதன் மூலம் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலைக்கு மாற்றலாம்.
உரமிட்டால் மகசூல் கூடும்
மானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரியவருகிறது. தமிழகத்தில் மானாவாரி சாகுபடிப் பரப்பில்10 சதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் மானாவாரிப் பகுதியாக உள்ளது. இதில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது. நிச்சயமற்ற மழை மற்றும் வறட்சி காரணமாக மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும், போதிய தொழுஉரம் கிடைக்காததாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பயிருக்கு உரமிடுவதில் புதிய உத்தியைக் கையாள்வது அவசியமாகிறது.
அதிகம் செலவு பிடிக்காத, மிகவும் எளிமையான இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் இடும் முறையை கையாள்வதன் மூலம் மானாவாரியிலும் மகத்தான மகசூலைப் பெறலாம்.
தயாரிப்பது எப்படி?
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும். மானாவாரி நிலக்கடலை விதைப்பதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பே இதைத் தயாரித்து வைக்க வேண்டும். ஒரு வண்டி (சுமார் 300 கிலோ) நன்கு மட்கிய தொழு உரத்துடன் (சாணிக்குப்பை) ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து மூட்டமாகக் குவித்து வைத்து நிழலில் களி மண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது நன்கு தண்ணீர் தெளித்து கெட்டியாக குவியலை தட்டிவிட வேண்டும். காற்றுப் புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும். அதை அப்படியே ஒரு மாதகாலம் விட்டு வைக்கும் போது, தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துக்களைப் பெறுகின்றன. ஒரு மாதம் கழித்து இத்துடன் 9 கிலோ யூரியாவைக் கலந்து ஒரு ஏக்கரில் விதைப்பருப்பு சால் விடும் போது அந்தப் படைக்காலிலேயே தூவிவிட வேண்டும். அதாவது முழுவதும் அடியுரமாகவே இட வேண்டும்.
இதன் மூலம், மானாவாரி நிலக்கடலைக்கு இடவேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றிப் பயிருக்கு உடனே கிடைக்கின்றன. பயிர்களின் வேர்வளர்ச்சி அதிகமாகி மகசூல் கூடுகிறது. மணிச்சத்து வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மேம்படுகிறது. மண்ணில் நீர் தேங்கும் திறன் அதிகரிக்கிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மற்ற சத்துக்களும் பயிருக்குக் கிடைத்து, விளைச்சல் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியின் போது இரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அதுமட்டுமின்றி ஒரளவு தொழு உரமும் பயிருக்கு இடும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாகத் தொழு இட்டால், இன்னும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) ‘ரைசோபியம்”, இரண்டு பொட்டலம் ‘பாஸ்போபேக்டீரியா” ஆகிய உயிர் உரங்களை நிலக்கடலை விதையுடன் ஆறியகஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கூடுதல் மகசூல் பெறலாம். விதை விதைக்கும் போது மேற்கூறப்பட்ட உயிர் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட்டு அதிக மகசூல் பெறலாம். பெருகிவரும் உரத்தட்டுப்பாடு, இடுபொருள்களின் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக நல்ல தரமான ஊட்டமேற்றிய தொழுஉரத்தை விவசாயிகள் உற்பத்தி செய்து பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.
இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர், அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
05 Feb 2026


