எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பதில் சொல்லும் பொறுப்பு என்பது பொறுப்பு உணர்வுடன் தொடர்புடையதாகும். அது ஒருவருடைய பொறுப்புணர்வின் ஆழத்தை அளந்து கணித்துவிடுகிறது. பதில் சொல்லும் பொறுப்பு, பொறுப்புக்களின் அடிப்படையில் ஒருவர் பெறும் வெற்றியைத் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது. தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே முற்படுகிறது.
மேலும் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதும் இந்த பொறுப்புணர்வே. அதே நிலையில் அவர் தோல்வியைத் தழுவுகிறபோது, தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆட்படுகிறது. தோல்வியின்போதுதான் தன்நிலையறிந்து நிதானத்துடன் செய்படுகிறது. பிறர் மீது பழி போடுவதற்குரிய வழிவகைகளை அது தேடுவதில்லை. யாரையாவது கைகாட்டிவிட்டு நாம் தப்பித்துவிடலாம் என்றும் யோசனை செய்வதில்லை. தவறுகளை அது தனக்குரியனவாக ஏற்றுக்கொள்கிறது. அதற்காகத் தவறுகளை எவ்வாறாவது நியாயப்படுத்த அது முயற்சி செய்வதில்லை.
பதில் சொல்லும் பொறுப்புடைமை ஐயங்களையும், அச்சங்களையும், அவநம்பிக்கைகளையும் அறவே களைந்துவிடுகிறது. அந்த பொறுப்புக்கு உட்படுத்தப்பட்டவுடன் தன்னிடமுள்ள அச்சங்களையும் ஐயங்களையும் அகற்றி தெளிவுடன் செய்பட ஆரம்பிக்கிறது. மேலும் தன்னிடம் ஒப்படைக்கப் பெற்ற கடும் பனிகளைப் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறது. கவனத்தோடும், ஊக்கம் தளராமலும் தமது கடமைகளைப் பதில் சொல்லும் பொறுப்பு நிறைவேற்றுகிறது. இதனாலேயே அது தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லுகிறது.
அது நல்லெண்ண உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. நம்பிக்கை உறுதிப் பாட்டுக்கு ஒருவர் உரியவரா என்பதைப் பதில் சொல்லும் பொறுப்பு நிரூபித்துவிடுகிறது. ஒருவரது நம்பிக்கைக்கு அது ஊட்டமளிக்கிறது. பதில் பொறுப்புடையவராக நடந்துகொள்வோரிடம் மக்கள் தங்கள் மதிப்பையும் நம்பிக்கையினையும் வெளிப்படுத்துகின்றனர். முழுமையான நம்பிக்கையையும் அவர்களிடம் வைக்கின்றார்கள். பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு வழிகோலுகிறது. அது முழுமையினையும் மனநிறைவினையும் அளிக்கிறது.
நற்செய்தி கூறும் கதை :
வெளியூருக்குப் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்தார். தமது உடைமைகள் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர் அவர் திறமைக்குத் தக்கவாறு ஒருவருக்கு 500 ரூபாயும், மற்றொருவருக்கு 300, வேறொருவருக்கு 100 எனவும் வழங்கிச் சென்றார். 500 ரூபாய்களைப் பெற்றவர், உடனடியாக அவற்றைப் பயன்படுத்திவேறு 500 சம்பாதித்தார். அவ்வாறே, 300 பெற்றவரும் மேலும் 300 சம்பாதித்தார். 100 ரூபாய் பெற்றவர் மண்ணைத் தோண்டித் தம் தலைவரது பணத்தைப் புதைத்துவைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பிறகு, அப்பணியாளர்களின் தலைவர் திரும்பிவந்து கணக்குக் கேட்டார். ரூ.500 பெற்றவர் அவரிடம் வந்து “ஐயா! நீங்கள் கொடுத்த ரூ.500-ஐ முதலீடாக்கி கூடுதல் 500 சம்பாதித்தேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர்; ஆதலால் பெரியவற்றுக்கு அதிகாரியாக நியமிப்பேன்” என்று பாராட்டினார்.
ரூ.300 பெற்றவரும் அவரிடம் வந்து “ஐயா நீங்கள் ரூ.300 கொடுத்தீர்கள்; மேலும் ரூ.300 சம்பாதித்துள்ளேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்லபணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். பெரியவற்றுக்கு அதிகாரி ஆக்குவேன்” என்றார். ரூ.100 பெற்றவரோ திரும்பிவந்து “ஐயா, உம் குணங்களை நான் நன்கு அறிவேன்; நீங்கள் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர், தூவாத இடத்தில் சேர்ப்பவர். ஆகவே உங்களுக்கு அஞ்சி, கொடுத்த பணத்தை நிலத்தில் புதைத்துவைத்தேன்.
இதோ! நீங்கள் கொடுத்த அதே பணம்!” என்று திரும்பித் தந்தார். அதற்குத் தலைவர், “சோம்பேறிப் பணியாளனே, என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருந்தாலும் கூட, நான் வந்தவுடன் எனது தொகையை வட்டியுடன் பெற்றிருப்பேன்! எனவே, இவனிடமுள்ள பணத்தைப் பிடுங்கி ரூ.1000 உள்ளவனுக்குக் கொடுங்கள்;; பயனற்ற இந்தப் பணியாளனைச் சிறையிலே தள்ளுங்கள்” என்றார்.
பதில் சொல்லும் பொறுப்புடைமையை வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் :
1. நல்லதே செய்தல் வேண்டும். நல்ல நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். தீயதை அரவே ஒழித்து விலக்கல் வேண்டும்.
2. ஒருவருடைய நற்பண்பு நலன்களையும், நல்ல திறன்களையும் வளர்த்தல் வேண்டும்.
3. கல்வி நமக்கு வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
4. உடைமைகளைக் கவனத்துடன் பயன்படுத்துதல்.
5. தம்மிடம் ஒப்படைத்த பணத்தை அறிவாற்றலுடன் செலவிடுதல்.
6. மூலவளங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
7. தம்மிடம் ஒப்படைத்த பொருள்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல்.
8. சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.
9. காலத்தைத் திட்டமிட்டுச் செலவிடுதல்.
10. பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளுதல்.
11. சட்டஒழுங்குகளைக் கடைபிடித்தல்.
தமது திறமை முழுவதையும் கவனத்துடன் நிறைவேற்றுதல்.
தமது கட்டுப்பாடுகளைக் கவனத்துடன் நிறைவேற்றுதல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


