முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி பண்டிகைக்கு தரமான பட்டாசுகளை சரியான விலையில் வாங்கி சிறப்பாக கொண்டாடுவீர்: கலெக்டர் சி.அ.ராமன் வேண்டுகோள்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      வேலூர்

 

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்து பேசியதாவது:-

தரமான பட்டாசுகள்

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ரூ.83 இலட்சமாக இருந்தது. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை ரூ.1 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்ட் நிறுவனத்தின் பட்டாசுகள் மட்டுமே தரமானதாகவும், விலை குறைவானதும் ஆகும். சூற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதற்காக இந்த வருடம் ஒரு புதிய உத்தியாக ரூ.5000ஃ- மேல் பட்டாசுகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மரக்கன்று இலவசமாக வழங்கப்படவுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் மற்றும் வேலூரில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்ட பொதுமக்களின் தேவைகளை அறிந்து மேலும் திருப்பத்தூர் மற்றொரு கிளை, வேலூர் மற்றும் காட்பாடி ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனைகள் துவங்கப்படவுள்ளது.

பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்காமல் மற்ற நேரங்களில் பட்டாசுகளை கவனமாகவும், பெற்றோர்கள் பாதுகாப்புடன் குழந்தைகள் பட்டாசு வெடிக்கவும், தண்ணீர் நிரம்பிய வாளியை பக்கத்தல் வைத்துக் கொண்டு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுமாறு கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் செல்வி.வனிதா, துணைப் பதிவாளர் பாஸ்கரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர்கள் நாகு, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து