மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு சரிவு: கருத்து கணிப்பில் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      அரசியல்
pm modi 2017 8 20

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் கூட பா.ஜ.க கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சீட் குறைந்தே கிடைக்கும் என்று ஒரு இதழ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் கூட பா.ஜ.க கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இப்போது வரை மோடியின் செல்வாக்கு அப்படியே நிலையாக உள்ளதாகவும், அடுத்த பிரதமராக அதிக தகுதி உடையவர்   நரேந்திர மோடி என 55 சதவீத பேரும்  ராகுல் காந்தி பெயரை  22 சதவீத பேரும் தெரிவித்து உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பிரதமராக தகுதி உடையவர் பட்டியலில் பிரியங்கா காந்தி  3 வது இடத்தில் உள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர் கிடைத்த சிறந்த பிரதமர் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதாவது 28 சதவீதம் பேர் சுதந்திரத்திற்குப் பிறகு கிடைத்த சிறந்த பிரதமர் மோடி எனத் தெரிவித்துள்ளனர். இந்திரா காந்திக்கு 20 சதவீத ஆதரவுடன் 2வது இடம் கிடைத்துள்ளது.

மோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக 41 சதவீதம் பேரும், சராசரியாக உள்ளதாக 25 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து