முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழும 3 பள்ளிகளின் 168யுகேஜி மாணவர்கள் பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

அரக்கோணத்தில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்தின் முன்று பள்ளிகளைச் சேர்ந்த 168 யுகேஜி மாணவர்கள் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு.

பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம், அரக்கோணம் எல்லையில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்தின் துளசியம்மா கலை அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன், ஆர்எஸ் ஐகேன், மற்றும் டிஆர்எஸ் குளோபல் ஆகிய முன்று பள்ளிகளில் 2017&18 ஆம் கல்வியாண்டில் பயின்ற 168 மாணவ, மாணவியர்களின் பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழும தலைவர் டிஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் டிஆர்எஸ்.ரவிக்குமார், இயக்குனர் சாம்பமுர்த்தி, மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜி.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை, திருவேற்காடு, ஆர்எம்கே.பள்ளி முதல்வர் இந்திராரங்கன் கலந்து கொண்டார். சிறந்த கட்டமைப்பு கொண்டு, எட்டு கல்வி நிறுவனங்களுடன் செல்படும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்தின் செயல்பாடு என்னை பிரமிக்க வைத்தது.

இந்நிறுவனத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களும் உயர்ந்த நிலைக்கு வருவது நிச்சயம். எனவே, இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார். நிகழ்வில் இரண்டு பள்ளிகளின் முதல்வர் சிந்து, மற்றொருவர் கௌரி, செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மேலாளர் குமார், உதவியாளர்கள் கண்ணன், சுரேஷ், உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவுற்றது. முன்னதாக நிகழ்ச்சிகளை உதவியாளர் வீரமணி தொகுத்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து