எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி பிரியங்காவை உடனடியாக தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. ராகுல் தனது ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் உண்ணாவிரதமும் இருந்தனர். ஆனால் ராகுல் தனது முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அத்துடன் புதிய தலைவரை தேர்வு செய்வதில் நான் தலையிடப்போவது இல்லை என்றும் கூறி ஒதுங்கி விட்டார்.
இதனை தொடர்ந்து பிரியங்காவை புதிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், பிரியங்காவை புதிய காங்கிரஸ் தலைவராக உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இயற்கையிலேயே தகுதி உள்ளவர் ராகுல் காந்தி மட்டுமே. இருப்பினும் அவர் திட்டவட்டமாக இனி பதவியில் நீடிக்க முடியாது என்று கூறிவிட்டார். மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி எதிர்க்கட்சியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இப்படி எதிர்க்கட்சியை நிர்மூலமாக்குவது ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயகத்தை வலுப்படுத்த வலுவான எதிர்க்கட்சி அவசியம்.
இதற்காக காங்கிரசுக்கு போர்க்குணம் கொண்ட தலைவரை தேர்வு செய்ய வேண்டும். மிரட்டலுக்கு பயப்படாதவராக மக்கள் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இப்போதைய சூழலில் பிரியங்காவே காங்கிரஸ் தலைவராக முழு தகுதி படைத்தவர் ஆவார். எனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி பிரியங்காவை உடனடியாக தலைவராக தேர்வு செய்ய வேண்டும். கட்சிக்கு தலைமை இல்லாத நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. அவர்கள் மனதில் அவ நம்பிக்கையும் ஏற்பட்டு விடக்கூடாது. இதனை வலியுறுத்தி ராகுல் உள்ளிட்ட மேலிட தலைவர்களுக்கு கடிதம் எழுத முயற்சித்து வருகிறேன். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


