முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் மோங்கியா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது. அப்போது இந்திய அணியில் வி.வி.எஸ். லட்சுமணுக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு இருந்தார். பஞ்சாபை சேர்ந்த தினேஷ் மோங்கியா கடந்த 1995-96-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை பேட்ஸ்மேனான தினேஷ் மோங்கியாவின் பேட்டிங் ஸ்டையிலும், சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் செய்யும் முறையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது.

இடதுகை சுழற்பந்து வீச்சிலும் தினேஷ் மோங்கியா அவ்வப்போது பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு புனேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தினேஷ் மோங்கியா அறிமுகமானார். இது வரை 57 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தினேஷ் மோங்கியா 1,230 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 159 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், 4அரைசதங்களை தினேஷ் மோங்கியா அடித்துள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான தினேஷ் மோங்கியா, 57 போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு தாகாவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தினேஷ் மோங்கியா அறிமுகமாகி விளையாடினார். அதன்பின் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியில் தினேஷ் மோங்கியாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்தின் லான்காஷ்சையர் அணிக்காக தினேஷ் மோங்கியா விளையாடினார். ஸ்டூவர்ட் லா விலகிக் கொண்டதையடுத்து அவருக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு ஒரு ஆண்டு முழுமையாக விளையாடினார். 121 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் மோங்கியா 8,028 ரன்கள் குவித்துள்ளார்.  சராசரியாக 48.95 ரன்களும் அதிகபட்சமாக 308 ரன்களும் சேர்த்துள்ளார். 27 சதங்களும், 28 அரைசதங்களும் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 10 சதங்கள், 26 அரைசதங்கள் உள்பட 5535 ரன்களை தினேஷ் மோங்கியா குவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் நியூஸிலாந்து பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் மோங்கியா மோசமாக பேட் செய்ததால் அணியில் இருந்து 2005-ம் ஆண்டு நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிய தினேஷ் மோங்கியா 38 ரன்கள் சேர்த்ந்திருந்தார். பி.சி.சி.ஐ.க்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில் பங்கேற்று தினேஷ் மோங்கியா விளையாடினார்.

இதனால் ஆத்திரமடைந்த பி.சி.சி.ஐ. அந்த தொடரில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதில் தினேஷ் மோங்கியா மீது நடவடிக்கை எடுத்தது. நீண்ட காலத்துக்குப் பின் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தினேஷ் மோங்கியாவுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பளித்தது. இந்நிலையில் 12 ஆண்டுகளாக எந்தவிதமான பிரதான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த தினேஷ் மோங்கியா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது 42 வயதில் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து