பிரதமர் மோடியுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      இந்தியா
tamisai meet PM Modi 2019 10 15

புது டெல்லி : தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநில கவர்னராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.   இதையடுத்து தெலுங்கானா மாநில கவர்னராக செப்டம்பர்  8-ம் தேதி அவர் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்தவர் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திடீரென சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து