வங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      விளையாட்டு
virat kohli 2019 10 20

டாக்கா : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வரும் விராட் கோலி வங்காளதேச டி20 தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுக்க உள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா தொடர், ஐ.பி.எல், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார். இதனால் வேலைப்பளுவை காரணம் காட்டி வங்காளதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்காளதேச தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 24-ம் தேதி நடக்கிறது. அப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து