மகளிர் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2020      விளையாட்டு
women hockey india beat eng 2020 02 05

ஆக்லாந்து : மகளிர் ஹாக்கி போட்டியின் 4 - வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடைபெற்ற 4 - வது ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர் கொண்டது.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை கேப்டன் ராணி ராம்பால் 47- வது நிமிடத்தில் அடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து