Idhayam Matrimony

முத்தரப்பு பெண்கள் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக ஆடி 57 பந்தில் 93 ரன்கள் எடுத்தார். கேப்டன் மேக் லேன்னிங் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களே அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள்  சேர்த்தது. அதன்பின், 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும், ஷபாலி வர்மா 49 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்னும் அவுட்டாகினர். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், தீப்தி ஷர்மாவும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், இந்திய அணி 19.4 ஓவரில் 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 2 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 4 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து